இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நீயில்லாத பயணங்களில்
கடும் குளிரால்
விறைத்துப் போகின்றேன்
சோதனைச் சாவடிகளில்
நிறுத்தப்படும் பேருந்தில்
எரிச்சலுடன் நடத்தப்படுகிறது
வெடிகுண்டுச் சோதனைகள்
பயத்துடன்
நடுநிசியில் இறங்கி
இருளில் தள்ளாடி
பொதியைச் சுமந்தபடி
இடித்து, இலக்கின்றி
நான் நகர்ந்து செல்கையில்…
தனிமைப் பயணமே உத்தமம்
குளிரின் கொடுமையை விட…
2 கருத்துகள்:
நல்ல கவிதை.
தமிழ் மனம், இன்டலி, திரட்டி போன்ற தளங்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி தோழரே,
முதலாவது நபராக வருகை தந்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்தைப் பகிர்ந்து சென்றுள்ளீர்கள்
நன்றிகள்
மன்னார் அமுதன்
கருத்துரையிடுக