நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

திங்கள், மே 30, 2011

கற்பிழந்த கதை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

விடுமுறையில் கூட

வேலைக்குச் சென்றாய்…

உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்


அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்


காலம் தாழ்த்தி
வீடு வந்து கோயிலென்றாய்


கண்டிக்கும் போதெல்லாம்
யாரோ அண்ணண்களோடு
ஒப்பிட்டாய்


ஆண்நட்பு, பெண்ணுரிமை
அத்தனையும் பேசிய நீ
அதையும் கூறிவிட்டல்லாவா
அணைந்திருக்க வேண்டும்


அதுதான்,
“நீ கற்பிழந்ததையும் – உன்
கடவுள் கைவிட்டதையும்”

2 கருத்துகள்:

-த.எலிசபெத்-(Raj suga) சொன்னது…

//நாகரிகமென்று
நாறிப்போகிறோம்
அலங்காரமென்று
அலங்கோலங்களை உடுத்திக்கொள்கிறோம்//
(என் கவிதையொன்று நினைவில் வந்தது)

நவீனகால நிஜங்களை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள், அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பரே.

-த.எலிசபெத்-(Raj suga)

alex paranthaman சொன்னது…

நன்றி தோழி ... எதையாவது செய்து புகழடைய விரும்புபவர்கள் இறுதியில் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்கிறார்களே என்ற கவலை தான் இந்தக்கவிதை...

உங்கள் கருத்திற்கும் புரிந்துணர்விற்கும் நன்றிகள்