இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
The greatest thing a father can do to his children, is to love their mother.
- Anjaneth Garcia Untalan
பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்
வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா
மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..
முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு
துக்கம் தாளாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா
யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா
இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை
5 கருத்துகள்:
நல்ல கவிதை.
நன்றி ஐயா
யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா) etheil mama anpathi thaverthu erukkalam.. ankaludiya (srilankan tamil) kalasaraththel ethu porunthathu,,anpathu annidiya karuththu,, peli anral mannikkavum
//வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா//
நமது கலாச்சாரத்தில் தான் பக்கத்து வீட்டுப் பெரியவர்களைக் கூட முறை சொல்லி அழைக்கிறோம்... இங்கு மாமா என்பது இரத்த உறவு முறையைக் குறிக்கவில்லை என்பதை கருத்தில் எடுக்கவும்... இது அடுத்த வீட்டு மாமா.. கருத்திற்கு நன்றி தோழரே
நல்ல கவிதை.
கருத்துரையிடுக