இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஏழை குழந்தைக்கு
உணவு
எதிர்வீட்டு கிழவிக்கு
இளைப்பென
எதுவந்தாலும்
எங்கேனும் சுற்றி
இறுதியில் வருவது
அவளிடம் தான்
ஊரே உலகமாயிற்று
அவளுக்கு
உலகமே அவளாயிற்று
ஊருக்கு
எது எப்படியாயினும்
எல்லோர் வீட்டிலும்
பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்
அவள் இராத்தங்காத
அந்த ஒரிரவைப் பற்றி மட்டும்
-- மன்னார் அமுதன்
4 கருத்துகள்:
அருமை.
வாழ்த்துகள்.
நல்லது எது செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் உலகம், நம்முடைய தீயதை மறக்கத்தயாரில்லை என்பதை அழகாகச் சித்திரித்துள்ளீர்கள். –கவிஞர் இராய. செல்லப்பா.
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/3_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்
வலைச்சர தள இணைப்பு : வீழ்வேனென்று நினைத்தாயோ ?!
கருத்துரையிடுக